காரைக்கால் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற சிவசங்கர் என்பவரது விசைப்படகு இரண்டு நாட்களுக்கு முன்பு இயந்திர கோளாறு காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாகவும் விசைப்படகை இயக்க முடியாததால் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகையும் தொழிலுக்கு சென்ற 14 மீனவர்களையும் மத்திய மாநில அரசுகள் விரைந்து மீட்டு தருமாறு. கோட்டுச்சேரி மேடு மீனவ பஞ்சாயத்தார் மருத்துவர் விக்னேஸ்வரன் தலைமையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை வைத்தனர்.