விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரியில் 111 கிலோவில் மெகா சைஸ் லட்டு வைத்து விநாயகருக்கு படையல் செய்து அசத்திய ஸ்வீட் கடை உரிமையாளர். மேலும் இந்த கடைக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி விநாயகருக்கு பூஜை செய்து, லட்டை பார்வையிட்டு கடை உரிமையாளருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி 45 அடி சாலையில் அமைந்துள்ளது ஜெயின் ஸ்வீட் கடையின் உரிமையாளர் விக்ரம். கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரிய அளவில் லட்டுகளை வைத்து விநாயகருக்கு படையல் செய்வது வழக்கம். அதன்படி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 11 கிலோ லட்டு செய்து படையல் செய்ய தொடங்கிய விக்ரம், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டாக 5 கிலோ எடைகளை அதிகரித்து தற்போது 21ஆம் ஆண்டாக 111 கிலோ லட்டு செய்து விநாயகருக்கு படையல் செய்துள்ளார். இதனிடையே இந்த ஸ்வீட் கடைக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி விநாயகருக்கு பூஜைகள் செய்து, லட்டை பார்வையிட்டதுடன், மெகா சைஸ் லட்டு செய்த கடை உரிமையாளர் விக்ரமிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும்
3 நாள் பூஜைக்கு பின்பு, இந்த லட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த லட்டை அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.