ஐபிஎல்-ல் முதல் பழங்குடி வீரர்… ₹3.60 கோடி…

ஐபிஎல்-ல் இடம்பெற்றுள்ள முதல் பழங்குடி வீரரானர பின் மின்ஸின் தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தற்பொழுது ஜார்க்கண்ட் விமான நிலையத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர்தான் இவருக்கு கிரிக்கெட் மீதான காதலை ஊட்டியவர்.

இந்த இளம் வீரர் ஏன் மிகவும் சிறப்பானவர் என்றால், ஐபிஎல் தொடருக்கு வரும் முதல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வீரர் இவர்தான். இந்தக் காரணத்தினால் இவருக்கு சிறப்பு கூடியிருக்கிறது. மேலும் எட்டு வயதிலிருந்து கிரிக்கெட்டை தொட்டு விட்டாலும், பத்தாவது வகுப்பை முடித்தபின் இவர் முழு நேர கிரிக்கெட்டராக மாறிவிட்டார். தற்போது வரை இவர் ஜார்கண்ட் மாநில அணிக்கு முதல் தர போட்டிகளில் அறிமுகமாகவில்லை. ஆனால் ஜார்க்கண்ட் 19 வயது மற்றும் 25 வயது உட்பட்டவர்களுக்கான அணிகளை கேப்டனாக வழி நடத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் மும்பை இவரை ஏலத்தில் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டியது. ஆனால் இவரை திடீரென உள்ளே வந்து குஜராத் டைட்டன்ஸ் வாங்கி ஆச்சரியப்படுத்தியது. மேலும் இந்த இளம் வீரரை இடதுகை பொல்லார்டு என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!