தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு புதுச்சேரி முழுவதும் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி மாநில
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சித்து பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா. சிவா வழிகாட்டுதல்படி நெல்லித்தோப்பு தொகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. காராமணிகுப்பம் முருகன் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.வி.எஸ்.சரவணன் திறந்து வைத்து தர்பூசணி, இளநீர், நுங்கு, நீர் மோர், வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதேபோல் சித்துவின் பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கழக நிர்வாகிகள் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.