புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி, மின்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மின்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டும், கதவுகளை இழுத்து மூட முயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், மின் கட்டணத்தில் உள்ள சர்சார்ஜ்களை நீக்க வேண்டும், மின்துறையை தனியார் மயமாக்ககூடாது, டிஜிட்டல் மின் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெருமாள் கோயில் வீதியில் உள்ள மின்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர், அக்கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் முற்றுகையிட்டும், கதவுகளை இழுத்து மூட முயன்ற நிலையில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். அப்போது அக்கட்சியினர் மின்துறை அலுவலக வாயலில் போராட்டத்தில் ஈடுபட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோஷங்கள் எழுப்பினர்.