ஏப்ரல் 10, 14, 18 ஆகிய தேதிகளில் புதுச்சேரி ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு விடுமுறை தினங்களான 10.04.2025 (வியாழக்கிழமை) மகாவீரர் ஜெயந்தி, 14.04.205 (திங்கட்கிழமை) டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள், 18.04.205 (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி ஆகிய‌ மூன்று நாட்களில் ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது‌ என்றும், எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், அதேநேரத்தில் அவசர சிகிச்சைப்பிரிவு சேவைகள் அனைத்தும் அந்த நாட்களில் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.