பேனா ஒரு லட்சம் ரூபாயா? புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் இந்தச் செயல் தான் இப்போ வைரல்!

ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் பேனாவில் கையெழுத்து போட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி! அப்படி என்ன அந்த பேனாவில் உள்ளது?

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, பொதுநல அமைப்பினர் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தை, முதலாவதாக முதலமைச்சர் ரங்கசாமி ரூபாய் 1 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான ஜெர்மன் பேனாவில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டுமென சட்டமன்றத்தில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்றால் மாநில அந்தஸ்து பெரும்வரை நாம் போராட வேண்டுமென்று முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில்
உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில்
புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 27-ந் தேதி தலைநகர் டில்லிக்கு சென்று போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, ஒரு லட்சம் கையெழுத்துகளைப் பெற்று மத்திய அரசிடம் வழங்குவதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
சட்டப்பேரவை முதலமைச்சர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கத்தில் மாநில அந்தஸ்து வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதலமைச்சர் ரங்கசாமி முதலாவதாக கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்பொழுது அவரிடம் அரசு கோப்புகளில் கையெழுத்திடும் பச்சை மை பேனா மட்டுமே இருந்தது. நீல மை கொண்ட பேனா தரும்படி அருகில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அப்போது அங்கிருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வழக்கறிஞர் ராம் முனுசாமி தனது பேனாவை முதலமைச்சரிடம் கொடுத்தார். முதலமைச்சர் ரங்கசாமி கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பின், பேனாவை பார்த்து வித்தியாசமாக இருக்கிறது எந்த ஊர் பேனா என கேட்க, அது ஜெர்மன் நாட்டை சேர்ந்த Montblanc Pen-Montblanc Pen, Warhol Special Edition என்றும், விலை ரூபாய்
1,33,600 என்று ராம் முனுசாமி முனுசாமி தெரிவித்தார்.
https://x.com/geetamilnews/status/1922963690044711117?t=OksDFIOLAd0QnxKAuZbCmQ&s=19

Montblanc பேனா – Warhol Special Edition பற்றி தமிழில் விளக்கம்:

Montblanc என்பது ஜெர்மனி நாட்டில் இருந்து வரும் உலக புகழ்பெற்ற பிரீமியம் பேனா உற்பத்தியாளர் பிராண்டாகும்.
அவர்கள் தயாரிக்கும் பேனாக்கள் உயர்தரமும், அழகான வடிவமைப்பும், சிறந்த எழுதும் அனுபவத்தையும் வழங்குவதால் பிரபலமாக உள்ளன.

Warhol Special Edition என்பது Montblanc நிறுவனத்தின் ஒரு சிறப்பு பதிப்பான (Limited Edition) பேனா வரிசை ஆகும்.
இந்த பேனாவுக்கு பெயர் தரப்படுவதற்குக் காரணம், புகழ்பெற்ற அமெரிக்க கலைஞர் மற்றும் போபு ஆர்ட் முன்னோடியான ஆண்டி வார்ஹோல் (Andy Warhol) அவர்களின் கலை மற்றும் சித்தாந்தங்களால் inspier ஆகி உருவாக்கப்பட்டதாக இருக்கிறது.

இந்த பேனாவில் Warhol அவர்களின் புகழ்பெற்ற பாப் கலையின் லட்சணங்கள், வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகள் பிரதிபலிக்கப்படுகின்றன.
இதனால் இதுவொரு கலையுடனும், பிரீமியமும் கூடிய பாணி பேனாகியிருக்கிறது.

Montblanc Warhol Special Edition பேனா விலை உயர்ந்தது, சில லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை கூட கிடைக்கும்.
இதுவே முதல்வர் ரங்கசாமி கையெழுத்து இயக்கத்தில் பயன்படுத்திய பேனாவின் கதையை மேலும் வித்தியாசமாக்கியது.