முன்னாள் முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன் பிறந்த நாள்: திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.வி.எஸ். சரவணன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன் அவர்களின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.வி.எஸ். சரவணன் ஏற்பாட்டின்பேரில் ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து ஜானகிராமன் அவர்கள் திருவுருவப் படத்திற்கு திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் அணிவித்து மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று ஜானகிராமன் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதியில் லெனின் வீதியில் உள்ள ஜானகிராமன் அறக்கட்டளை அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.வி.எஸ் சரவணன் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆர்.வீ. ஜானகிராமன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் நெல்லித்தோப்பு தொகுதி திமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.