அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை!. பிரதமர் மோடி வழிபாடு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடந்த பூமிபூஜையை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ராமர் ஆலயம் கட்டப்பட்டு வந்தது. அயோத்தி ராமர் கோவிலை 3 கட்டங்களாக அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்கக்ப்பட்ட அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ரூ.1800 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கருவறையில் 51 அடி அங்குலபால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து புதிய ராமர் சிலைக்கு பிரதமர் மோடி பூஜைகளை செய்தார். பின்னர் மோடி ஸ்ரீ ராமரிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார்.

பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டினார். அப்போது உ.பி ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோரும் வழிபாடு செய்தனர்.

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அபிஷேக் பச்சன், சந்திரபாபுநாயுடு, சச்சின் டெண்டுல்கல், சாய்னா நேவால், மித்தாலி ராஜ், விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.
குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்ட போது ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.