புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி கீதா. இவர் லாஸ்பேட்டையில் உள்ள புதுவை பாரதியார் கிராம வங்கியில் கணக்கு வைத்திருந்தார். வங்கி கணக்கு மூலம் விபத்து காப்பீடாக ஆண்டுக்கு ரூ. 354 பிரிமியம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், அவர் விபத்து ஒன்றில் இறந்தார். அதனை அடுத்து, வங்கி மூலம் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து, 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
அந்த நிதிக்கான காசோலையை, இறந்தவரின் கணவர் சிவசங்கரனுக்கு, பாரதியார் கிராம வங்கியின் தலைவர் ரத்தினவேல் வழங்கினார். அப்போது, லாஸ்பேட்டை கிளை புதுவை பாரதியார் கிராம வங்கியின் மேலாளர் காயத்திரி உட்பட வங்கி ஊழியர்கள் மற்றும் யூனிவேர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் ன் யூனிட் விற்பனை மேலாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.