புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் அவரது தோட்டத்தில் விளைந்த பலா பழங்களை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்திற்கு லாஸ்பேட்டை, காலாப்பட்டு, கோட்டக்குப்பம் ஆகிய பகுதியில் பூர்வீக விவசாயம் நிலம் உள்ளது. அங்கு மா, பலா, முந்திரி பல ஏக்கரில் பயிரிட்டுள்ளார். தற்போது பாலப்பழம், முந்திரி சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில் தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழங்களை பண்ருட்டியில் இருந்து ஆட்களை கொண்டு வந்து அறுவடை செய்துள்ளார்.
அறுவடை செய்யப்பட்ட பலாப்பழங்களை ஒரு வேனில் ஏற்றி சட்டசபைக்கு கொண்டு வந்த அவர், முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பலாப்பழங்களை கொடுத்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை அதிகாரிகளுக்கு பலாப்பழங்களை வழங்கினார்.
தனது தோட்டத்தில் விளைவிக்கப்படும் மணிலா, முந்திரி, வாழை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு வகையான விளைபொருட்களை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.