அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் (ஐஓசி) ஐரோப்பாவுக்கான பொதுச் செயலாளராக புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட முகமது இர்ஷாத் என்பவரை நியமித்துள்ளது.
இர்ஷாத்தின் தலைமைத் திறன்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூகத்திற்குச் சேவை செய்வதில் அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதால், அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் பொறுப்பு செயலாளர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பாவில் உள்ள இந்தியர்களிடையே ஒற்றுமை மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கும், ஐரோப்பாவில் உள்ள இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கும் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸின் முயற்சிகளுக்கு பங்களிக்க ஆர்வமாக உள்ளதாக முகமது இர்ஷாத் கூறியுள்ளார்.