கடந்த 2019 இல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. உலகிலா உள்ள பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் மக்கள் கொரோனோ தடுப்பூசி செலுத்திகொண்டதால் கொரோ வைரஸ் கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனோ வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58 வயதான கோவிந்த் என்ற கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்துக்கு பல்வேறு இணை நோய்கள் இருந்ததாகவும்,
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே புதுச்சேரியில் தற்போது 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.