தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு, புதுச்சேரி முழுவதும் திமுக சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் குளிர்ச்சியான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
உருளையன்பேட்டை, வில்லியனூர், முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, மணவெளி, கதிர்காமம் தொகுதிகளை தொடர்ந்து ராஜ்பவன் தொகுதியில் தொகுதி செயலாளர் மோகன் ஏற்பாட்டின்பேரில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. எஸ்.வி.பட்டேல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை, அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார் முன்னிலையில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா திறந்து வைத்து தர்பூசணி, இளநீர், நீர் மோர், ரோஸ்மில்க், ஐஸ்கிரீம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
முன்னதாக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கழக நிர்வாகிகள் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் லீ. சம்பத் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், பிரபாகரன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், சிவக்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரய்யன், விளையாட்டு அணியின் துணை அமைப்பாளர் ஆனந்து, மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் முத்தரசன், தொகுதி கழக நிர்வாகிகள் மணி, கார்த்திக், ரவீந்திரன், குணா, பாரி, ஏழுமலை, ராஜா, சூர்யா, குணா, அசோகன், சாமிக்கண்ணு, தசரதன், ரமேஷ், மகேந்திரன், சரத், பிரசாந்த், கலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.