பாஜக தலைவரை போல சபாநாயகர் செல்வம் செயல்படுவதாக கூறி, புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் சட்டமன்ற இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், புதுச்சேரிக்கு பிரதமர் மோடி கூறிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை, அதேபோல் மாநில அந்தஸ்து பெறவில்லை என பேசினார். அப்போது குறுக்கிட்ட பாஜக அமைச்சர் நமச்சிவாயம் பிரதமர் மோடி கூறியதுபோல் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற அனைத்து திட்டங்களும் நிறைவேற்றபடுகிறது என தெரிவித்தார்.
மேலும் மாநில அந்தஸ்து தொடர்பாக சபாநாயகர் செல்வம் பேசுகையில், 12 முறை காங்கிரஸ் ஆட்சியில் ஏன் மாநில அந்தஸ்து பெறவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது எதிர்கட்சி தலைவர் இரா. சிவா குறுக்கிட்டு நீங்கள் சபாநாயகர், ஆனால் பாஜக கட்சிகாக பாஜக தலைவரை போல பேசுவது தவறு என சுட்டிகாட்டியும், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பேசவிடாததை கண்டித்தும் எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் காங்கிரஸ் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.