தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு, புதுச்சேரி முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் ஏற்பாட்டின்பேரில் 11 ஆம் ஆண்டாக நீர் மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி, இளநீர், நுங்கு, நீர் மோர், கரும்புச்சாறு, வெள்ளரிக்காய், சப்போட்டா, கிர்ணிப்பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் கழக அமைப்பாளர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பெண்மணிக்கு தள்ளுவண்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் லோகையன் உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், லாஸ்பேட்டை தொகுதி செயலாளர் தியாகராஜன், கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல், , முத்தியால்பேட்டை தொகுதி கழக துணை செயலாளர் செல்வம், தொகுதி பொருளாளர் மூர்த்தி மாநில பிரதிநிதி சிவக்குமார், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் உத்தமன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் செந்தில் முருகன், துணை அமைப்பாளர் சேகர், சந்துரு மாநில மீனவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் முனுசாமி, மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயமூர்த்தி, மாநில தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் நவீன்,மாநில தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சிவதாஸ், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் மோகனசுந்தரம், வேணு, மனோகர், சிவலிங்கம், முன்னாள் தொகுதி கழக பொருளாளர் செல்வம், கழகத்தின் மூத்த முன்னோடிகள் பக்கிரி சாமி, சாரங்கம், செல்வம், சொக்கலிங்கம், வீரன், ரமேஷ்.
கிளைக் கழக நிர்வாகிகள் ஏகாம்பரம் காந்தி, சண்முகம், நாராயணன், மணிகண்டன், மணிவண்ணன், அருள், தமிழ்வாணன், வாசுதேவன்,வேலு, ரெமோ, முருகன், வேலு, சண்முகம், சுப்புராயன், பாவாடை, பாஸ்கரன், திருவேங்கடம்,சுரேஷ், கார்மேகம், ஏழுமலை, குணசேகர்,பழனி சுரேஷ், தங்கவேலு மகேந்திரன், தன்ராஜ் வினோத்,கலைவாண நகர் கார்த்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.