புதுச்சேரியில் வீட்டில் வளர்த்த தங்கள் செல்ல பிராணியான நாய்க்கு, குடும்பத்தினருடன் நலங்கு வைத்து, மஞ்சள் நீராட்டு விழா செய்து கொண்டாடினர்.
புதுச்சேரி வாழைக்குளம் பகுதியில் வசிப்பவர் அருண் – சத்யா தம்பதியினர். இவர்கள் சசிகலா என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வருகின்றனர். இந்த செல்ல பிராணிக்கு 11 மாதம் என்பதால் அந்த நாய் வயதுக்கு வந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களது குடும்பத்தாருடன் நாய்க்கு அலங்காரம் செய்து, மஞ்சள் நீராட்டு விழா செய்தனர் . இதில் முறைப்படி தாய் மாமன் பஸ்கால் (சத்யாவின் சகோதரன்) சசிகலாவிற்கு (நாய்க்கு) மாலை அணிவித்து சீர் செய்தார். இதேபோன்று அத்தை லதா, மேனகா, பாட்டி சுமதி, மணிமேகலை உள்ளிட்ட உறவினர்கள் பலரும் பங்கேற்று சசிகலாவிற்கு நலங்கு வைத்து வடை, புட்டு, ஜாங்கிரி, கொழுக்கட்டை, பூ என பெண் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழாவை போன்றே நடத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.