புதுச்சேரி கருவடிக்குப்பம் விநாயகர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது ரூ. 20 ஆயிரம் செல்லாத ஜெராக்ஸ் நோட்டுகளை மர்ம நபர்கள் உண்டியலில் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தள்ளது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட கருவடிகுப்பம் பகுதியில் சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கோவிலில் இருந்த உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது உண்டியலில் செல்லாது என அறிவிக்கப்பட்ட
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதோடு, பழைய நாணயங்கள், ஓட்டை கால் அணா, செல்லாத 20 ஆயிரம் மதிப்புடைய போலி ஜெராக்ஸ் நோட்டுகள், சிலுவை, வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் வாசர் உள்ளிட்ட கண்ணிற்கு தென்பட்ட அனைத்து பொருட்களையும் கோவில் உண்டியலுக்குள் மர்ம் நபர்கள் போட்டுச் சென்றுள்ள சம்பவம் கோவில் நிர்வாகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை கோவில் நிர்வாகிகள் கிழித்தும், தீயிட்டு கொளுத்தியும் அழித்தனர்.