ஊட்டியை புதுச்சேரிக்கு கொண்டுவந்த மலர், காய்கனி கண்காட்சி.! மிஸ் பண்ணிடாதீங்க…

புதுச்சேரி வேளாண்துறை சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் மலர், காய் கனி கண்காட்சி இன்று தொடங்கியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் மற்றும் பல்வேறு அலங்கார பொம்மைகளின் அணிவகுப்பு பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதுச்சேரியில் வேளாண்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர், காய், கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது அதன்படி இந்த ஆண்டு 34 வது மலர், காய்கனி கண்காட்சி தாவாரவியல் பூங்காவில் தொடங்கியது. இதனை முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இந்த மலர் கண்காட்சியில் புதுச்சேரி அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ண வண்ண மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கசேனியா, டைலார்டியா, பொரேனியா, டெர்பினா, ஸ்நாப்டிராகன், செலோசியா, சால்வியா, பெட்டுனியா என புதிய ரக பூஞ்செடிகளும், 50 க்கும் மேற்பட்ட ரகங்களில் ரோஜாப்பூக்கள் அணிவகுத்து
காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை மிகவும் கவரும் விதமாக வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கலால் செய்யப்பட்ட நந்தி மண்டபம் மயில், மான், வண்ணத்துப்பூட்சி, அனில் போன்ற உருவங்களில் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதை கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் பாகற்காய்கொண்டு உருவாக்கப்பட்ட படகு, காய்கறிகள் மற்றும் பழங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட பல்வேறு வடிவங்கள், உருவங்கள் மிக பிரமாண்டபாக அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்காக அலங்கரிக்கப்பட்ட மலர்படுக்கை மற்றும் புல்வளாகத்தில் மலர்களில் அணிவகுப்பில் நடந்து சென்ற பார்வையாளர்கள் ரம்மியமாக கண்டு ரசித்தனர்.

மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், புதியவகை உரவகைகள் காட்சிக்கு வைக்கபப்ட்டுள்ளது. வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த மலர் கண்காட்சியில் ரூ.5 முதல் ரூ.100 வரையில் பூச்செடிகள் அரசின் மானிய விலையில் விற்பனை செய்யபபடுகின்றது. மேலும் இந்த கண்காட்சியின்போது காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் காரைக்கால் மாவட்ட பகுதிக்கு ஏற்ப உருவாக்கியுள்ள KKL(R)2 என்ற நெல் ரகம் வெளியிடப்படவுள்ளது.

கண்களுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரும் வகையில் வண்ண வண்ண மலர்களின் அலங்காரம் பொதுமக்கள் மற்றும் வார இறுதிநாட்களில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிககளை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. இந்த கண்காட்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது.