மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி ஆயுஷ் மருத்துவமைனையில் ஒப்பந்த அடிப்படையில் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இது குறித்து புதுச்சேரி ஆயுஷ் இயக்குனர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனையில் 20 பணியிடங்கள் மற்றும் ஏனாம் மருத்துவனையில் 20 பணியிடங்கள் என மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் புதுச்சேரி htttp://health.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூத்தி செய்து வரும் ஜூன் 20ம் தேதிக்குள் ஆயுஷ் இயக்குனரரகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
முழு விவரம்:
அறிவிக்கப்பட்ட தேதி: 26/05/2025
துறை: புதுச்சேரி அரசு, ஆயுஷ் இயக்குநரகம்.
வேலை வகை: ஒப்பந்த அடிப்படையில்.
மொத்த காலியிடங்கள்: 40
விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்: யூனியன் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே
பணியிட விவரங்கள்:
1. மருத்துவ அதிகாரி (Medical Officer) பணிக்கு மொத்தம் 6 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான மாத ஊதியம் ரூ.40,000 ஆகும்.
2. உதவி மேட்ரன் (Assistant Matron) பணிக்கு 2 காலியிடங்கள் உள்ளன. மாத ஊதியம் ரூ.30,000.
3. ஊழியர் நர்ஸ் (Staff Nurse) பணிக்கு 12 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊதியம் ரூ.20,000.
4. பஞ்சகர்மா நிபுணர் (Panchakarma Technician) ஆண் மற்றும் பெண் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. மாத சம்பளம் ரூ.12,000.
5. யோகா பயிற்சியாளர் (Yoga Instructor) பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊதியம் மாதம் ரூ.12,000.
6. மருந்தாளர் (Pharmacist) பணிக்கு 6 காலியிடங்கள் உள்ளன. மாத ஊதியம் ரூ.12,000.
7. ஆய்வக நிபுணர் (Lab Technician) பணிக்கு 2 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளம் மாதம் ரூ.10,000.
8. மசாஜ் நிபுணர் (Masseur) ஆண் மற்றும் பெண் பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. ஊதியம் ரூ.10,000.
9. பதிவாளர் (Registration Clerk) பணிக்கு 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.10,000 ஆகும்.
இடஒதுக்கீடு விவரங்கள்:
பொதுப்பிரிவு (UR)– 33
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (MBC) – 4
ஆதிதிராவிடர் (SC)– 1
பொருளாதாரத்தில் பிற்பட்டோர் (EWS) – 1
மற்ற பிற்பட்டோர் (OBC) – 1
முக்கிய குறிப்புகள்:
* இப்பணிகள் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்
* ஒப்பந்த காலம்: 11 மாதங்கள், தேவைப்பட்டால் நீட்டிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் நேரடி அறிவிப்பு இணைப்புக்கு, எங்கள் இணையதளத்தை www.geetamil.com-ல் பார்வையிடுங்கள்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிருங்கள். குறிப்பாக புதுச்சேரி, வில்லியனூர் மற்றும் யானம் பகுதி இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்!