கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது, குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு துணைநிலை ஆளுநர் விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும் மாணவர்களில் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயலாளர், டிஜிபி, உள்ளிட்ட உயரதிகாரிகள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கலந்துகொண்டனர்.

தெலுங்கானாவில் தேசியக்கொடியேற்றி வைத்துவிட்டு தனிவிமானம் மூலம் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.