காரைக்கால் மீனவர்களுக்காக குரள் கொடுத்துள்ள ஆளுநர் தமிழிசை

இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு மாண்புமிகு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கருக்கு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில்,இந்திய மீனவர்கள் பதினான்கு பேரையும் அவர்களது மீன்பிடிப் படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்திருக்கும் வேதனை அளிக்கக்கூடிய சம்பவம் குறித்து தங்களது கவனத்திற்குக் கொண்டுவர இந்த கடிதத்தை எழுதுகிறேன். அவசரமான சூழ்நிலை காரணமாக உரிய தீர்வு காண தங்களது உதவியை நாடுகிறேன்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரிமேடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் சிவசங்கருக்கு சொந்தமான IND PY PK MM 1497 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு 17 திசம்பர், 2023 அன்று சிறைபிடிக்கப்பட்டது. மீனவர்களின் குடும்பத்தினர் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தங்களது மேலான வழிகாட்டுதலின்படி, வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு விரைவாக உரிய தீர்வு காணும் என்று நம்புகிறேன். இந்த மீனவர்கள் விடுதலை அடைந்து பாதுகாப்பாக நாடு திரும்புவதற்குகான வழிவகையை வெளியுறவு அமைச்சம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.