புதுச்சேரியில் மார்ச் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

மாசி மகத்தை முன்னிட்டு காரைக்காலில் மார்ச் 13 ம் தேதி வியாழக்கிழமையும், புதுச்சேரியில் மார்ச் 14 வெள்ளிக்கிழமையும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் பொதுத்தேர்வுகள் அந்த தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.