புதுச்சேரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 2000 காலிபணியிடங்கள் – SSLC, H.SC, ITI, Diploma, UG/PG Degree, Medicinal Cources and Engineering பட்டம் பெற்றவர்களுக்கு அரிய வாய்ப்பு.!!

புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரசு பெண்கள் பொறியல்கல்லூரி வளாகத்தில் லாசபேட்டை, புதுச்சேரி காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக 40 முன்னணி புதுச்சேரி மற்றும் தமிழகம் சார்ந்த தனியார் நிறுவனங்கள்
கலந்துகொள்கின்றனர்.

இதில் SSLC, H.SC, ITI, Diploma, UG/PG Degree, Medicinal Cources and Engineering பட்டம் பெற்றவர்கள் இம்முகாமில் பங்கு பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது Resume (10 Nos.) மற்றும் கல்வித்தகுதிக்கான உண்மை/நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.