புதுச்சேரி மாநிலத்தில்
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 33 காவலர்கள் மற்றும் 16 காவல் ஓட்டுநர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற விழாவில் பணி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஶ்ரீநிவாஸ், காவல் துறை துணைத் தலைவர் திரு பிரிஜேந்திரகுமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.