காவலரான தனது தந்தையை சாலை விபத்தில் இழந்த மகன் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.சி தேர்வில் 594 மதிப்பெண்கள் எடுத்து சாதனை… தந்தையின் ஆசைப்படி கலெக்டராக மாணவன் விருப்பம்.!!

புதுச்சேரியில் காவலரான தனது தந்தையை சாலை விபத்தில் இழந்த மகன், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.சி பொதுத்தேர்வில் 494 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். மேலும் தனது தந்தையின் ஆசைப்படி கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக மாணவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த அசோக்ராஜ் என்பவர், புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ராஜீவ்காந்தி சதுக்கம் அருகில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில் அசோக்ராஜின் 14 வயது மகன் லோகச்சந்தர் வாணரப்பேட்டை பகுதியில் உள்ள அமலோற்பவம் தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று வெளியான சி.பி.எஸ்.சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் 494 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். விபத்தில் தனது தந்தையை இழந்தாலும், தந்தை இறந்து நான்கு மாதத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவன் அதிக மதிப்பெண் எடுத்து தந்ததைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதுகுறித்து மாணவன் லோகச்சந்தர் கூறுகையில், தனது தந்தையின் பிரிவு மிகுந்த வலியை அளித்தாலும், தாய் லதா அளித்த ஊக்கத்தின் காரணமாக அதிக மதிப்பெண்கள் பெற முடிந்ததாகவும், தனது தந்தையின் ஆசைப்படி கலெக்டராகி மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.