புதுவை மாநில தமிழன தளபதி ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உழவர்கரை தொகுதி கம்பன் நகரில் புதிய சங்க பெயர் பலகை திறப்பு விழா இன்று காலை நடந்தது.
தொகுதி செயலாளர் கலியகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, ஆட்டோ தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் விஜயரங்கம், வழக்கறிஞர் அணித் தலைவர் லோககணேசன், மாநில துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் தாமோதரன், அன்புமாறன், சுகுமாறன், சுப்ரமணியன், சந்தோஷ், பாலு, புஷ்பலதா, ஜான்சிராணி, எமில், ஐய்யப்பன், எழில், அமுதன், செல்வராஜ், கங்காதரன், அன்புச்செல்வன், ரங்கநாதன், அகிலன், துணைச் செயலாளர் வெங்கடாஜலபதி, பொருளாளர், செந்தமிழ்செல்வன், தொமுச நிர்வாகிகள் அண்ணா அடைக்கலம், காயாரோகணம், சிவக்குமார், பூமிநாதன், ராஜசேகர், ஆட்டோ சங்கத் தலைவர் முரளி, விமல், விக்னேஷ், தினேஷ், முத்து அந்தோணி, லுசியன், முருகவேல், தொகுதி நிர்வாகிகள் செல்வராஜ், ழாக், கண்ணன், ரமேஷ், ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, முரளி, முருகன், மரிஜோசப்திவி, அன்பழகன், அகஸ்டீன், மதியழகன், தொகுதி இளைஞர் அணி அருண், ரகு, செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், லமார் ஜான்சன், அர்மன், பாபு, ஜான்சன் மாறன், லூர்துநாதன், மாரிமுத்து, சந்திரன், கில்பர்ட், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.