புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு 22 ந் தேதி திங்கட்கிழமை விடுமுறை… தேர்வுகள் அனைத்தும் ரத்து

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதனிடையே அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதேபோல்
ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஏதுவாக புதுச்சேரியில் வரும் 22 ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 22-ம் தேதி புதுவை மத்திய பல்கலைக்கழகத்திற்கு முழுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், அந்த தேதியில் நடைபெற இருந்த இளநிலை படிப்புகளுக்கு 25ஆம் தேதியும், எம்.பி.ஏ படிப்புகளுக்கு 30ஆம் தேதியும் தேர்வுகள் நடைபெறும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.