புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவு.! வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கிவரும் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 12-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகளாக உள்ளன. இக்கல்லூரிகளில் ஆயிரத்து 380 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மொத்த இடங்களில், பெரும்பான்மையான இடங்கள் புதுச்சேரியில் உள்ள 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிவானது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து எம்.பி.பி.எஸ். தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.