சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 3 வருட சிறை என்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் அமைச்சர் பொன்முடி. அமைச்சர் பதவியையும் இழந்தார்.
ஊழல் வழக்கு – சட்டம் சொல்வது என்ன?
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே, தகுதியை இழக்கிறார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடரமுடியும். 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் உயர்நீதிமன்றத்திலேயே ஜாமீன் கோர முடியும். ஒருவேளை 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில்தான் ஜாமீன் பெற முடியும்.