புதுச்சேரியில் இன்று செவ்வாய்க்கிழமை‌ மின்தடை: எந்தெந்த பகுதிகளில் எப்போது?

இன்று செவ்வாய்க்கிழமை (20.05.2025)
தொண்டமாநத்தம்- வில்லியனுார் மின்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ராமநாதபுரம் ஒரு பகுதி, பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணலிப்பட்டு மின்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இத்தகவலை பொதுமக்கள் முன்கூட்டியே அறிந்து தங்களது தேவைகளை திட்டமிட்டு செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது.