புதுச்சேரியில் நாளை (10-01-2024) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

இதுகுறித்து புதுச்சேரி மின்துறை விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை 110/22,11 கி.வோ. மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 22 கி.வோ. அரியாங்குப்பம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 10-01-2024 புதன்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 03:00 மணி வரை அரியாங்குப்பம், நோனாங்குப்பம், மணவெளி, ஓடைவெளி, காக்காயந்தோப்பு, வீராம்பட்டிணம் மற்றும் சின்னவீராம்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று அறிவிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் மின்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.