நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்துக்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. மேலும் அவர் நீட் குறித்தும், அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிட்டும் பல்வேறு கருத்துகளை பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் பலரும் ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ராகுல் காந்தி பேசிய சில வரிகளை அவைக்குறிப்புகளில் இருந்து நீக்க சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்துக்களை வன்முறையாளர்கள் என பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் அசோக் பாபு சட்டமன்ற வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.