புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.!!

பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வு வரும் 12-ம் தேதி துவங்கி 22-ம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 23ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2025- 2026ம் ஆண்டிற்கான கல்வியாண்டு துவங்குகிறது.

இதையடுத்து மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு மீண்டும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.