புதுச்சேரியின் டி.ஜி.பியாக கடந்த ஓராண்டாக ஸ்ரீனிவாஸ் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்துடன் அவர் ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதுச்சேரியின் புதிய டி.ஜி.பியாக டெல்லி காவல்துறையில் குற்றப்பிரிவு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷாலினி சிங்கை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நியமித்தது. இதனையடுத்து நேற்று புதுச்சேரி வந்த அவர், இன்று புதுச்சேரியின் டி.ஜி.பியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு புதுச்சேரி காவல்துரையின் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக புதிய டி.ஜி.பிக்கு புதுச்சேரி காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கபட்டது.
இதனிடையே புதிய டி.ஜி.பி ஷாலினி சிங் முதலமைச்சர் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.