புதுச்சேரியில் பள்ளிகளில் மே 1 முதல் கோடை விடுமுறை

இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் இந்த கல்வியாண்டு முழுமையாக மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் விதிமுறைகளின்படி பள்ளிகள் 2024 ஏப்.1 முதல் 2025 மார்ச் 31ந்தேதி வரை நடைபெறும்.

மார்ச் 24 முதல் 31ந்தேதி வரை மற்றும் மே.1ந்தேதி முதல் 31ந்தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 25 ந்தேதி(மார்ச்) முதல் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கப்படுகின்றது.