தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் தாலுக்காக்களுக்கு உள்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.