புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பால் பொதுமக்கள் வீடுகளை விட்டு சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் நான்கு மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர் பாம்பை லாவகமாக மீட்டு வனத்துறைக்கு எடுத்து சென்றார்.
புதுச்சேரி முத்திரைபாளைம் அகத்தியர் தோட்டம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் சரவணன் என்பவரது வீட்டில் சுமார் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்துள்ளது. தொடர்ந்து அங்கிருந்து நகர்ந்து அருகிலுள்ள வீடுகளுக்குள் சென்று போக்கு காட்டியுள்ளது. இதனால் பயந்துபோன அந்த பகுதியில் மக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி,இதுகுறித்து முதலில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் வனத்துறையினர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களும் பாம்புகளை பிடிப்பது தங்களது பணி இல்லை என கூறியுள்ளனர்.
https://x.com/geetamilnews/status/1833842084979122593?t=5XqtLrUeOgqeKkYVBcceiQ&s=19
சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பாம்பின் அசைவுகளை கண்காணித்த வந்த அப்பகுதி மக்கள், இறுதியாக காவல்துறையின் அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டதை தொடர்ந்து, அந்த பகுதிக்கு வனத்துறை ஊழியர் சம்பவம் கண்ணன் வருகைபுரிந்து, சரவணன் வீட்டு கார்டனில் உள்ள அறையில் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறைக்கு எடுத்துச் சென்றார். இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். மேலும் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் புகுந்தால், அது குறித்து வனத்துறைக்கு புகார் தரும் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்யாமல் உடனடியாக வனத்துறையினர் பாம்புகளை மீட்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.