புதுச்சேரியில் மாணவர்கள் குடியுரிமை, சாதி சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்! அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…

புதுச்சேரியில் 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக, குடியுரிமை, குடும்பம் மற்றும் சாதி சான்றிதழ்களை பெற மாணவர்கள் மற்றும் பெற்றோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதையடுத்து, விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மாணவர்களுக்காக மட்டுமே கீழ்க்காணும் தேதிகளில் சிறப்பு சான்றிதழ் வழங்கும் முகாம்கள் நடைபெறும்:

முகாம் தேதிகள்:

* 24.05.2025
* 31.05.2025
* 07.06.2025

மேலும், வட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலர்களின் தலைமையில் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. மாணவர்கள் சான்றிதழ்களை சீராகப் பெறும் வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, சான்றிதழ் பெறுவதற்காக தாமதம் அல்லது குழப்பம் ஏற்படாத வகையில் திட்டமிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தேவையான சான்றிதழ்களை நேரத்தோடு பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.