சுனாமி நினைவு தினம்: கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய முதல்வர் ரங்கசாமி

கடந்த 2004 ஆம் ஆண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையோரம் முழுவதும் நூற்றுக்கணக்கான மீனவமக்கள் மலர் தூவியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே மீன் வளத்துறை சார்பில் அனுசரிக்கப்பட்ட சுனாமி நினை தினத்தையொட்டி, முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோல் காங்கிரஸ், பாஜக மற்றும் திமுகவினர் சார்பிலும் கடற்கரையோரப்பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.