புதுச்சேரியில்‌ சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி உட்பட‌ இருவர் கைது: மேலும் ஒரு பெண்ணிடம் விசாரணை.!

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் 14 வயது சிறுமிகள் இருவரை வாலிபர்கள் சிலர் பாலியல் பலாத்தகாரம் செய்த வழக்கில் இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், மாற்றுத்திறனாளி உட்பட மேலும் இருவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 14 வயது கொண்ட 8 ஆம் வகுப்பு வரை படித்திருந்த, மாணவிகள் இரண்டு பேர் மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் மாணவிகள் வீடு திரும்பினர். தொடர்ந்து இரண்டு சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில், அவர்களை வைத்திக்குப்பத்தை சேர்ந்த புஷ்பராஜ், மணிமாறன், வினோத் ஆகியோர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளதும், இதேபோல் மேலும் சிலர் அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் மாற்றுத்திறனாளி ரவி என்பவரும், மீனவர் ஆகாஷ் என இருவரை தற்போது கைது செய்துள்ள போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.