நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட சென்றபோது, இயக்குனர் மாரி செல்வராஜூம் உடன் சென்றிருந்தார். இதற்கு ஒரு சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்திருந்தனர்.
நடிகர் வடிவேலு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அது அவருடைய ஊர். அந்த ஊரில் மேடு, பள்ளம் எங்கு பள்ளம் எங்கு இருக்கிறது என அவருக்குத் தான் தெரியும். ஏன் போகக்கூடாதா? அவர் ஊரில் அவர் போகாமல், வேறு யார் போவது? அவர் என்ன அமெரிக்காவில் இருந்து வந்திருக்காரா? என தெரிவித்துள்ளார்.