புதுச்சேரியில் பட்டபகலில் கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் தனது கையை சராமாரியாக பிளேடால் அறுத்துக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சா போதைக்கு ஆளாகும் இளைஞர்களால் மாநிலத்தின் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விகுறியாகியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் பின்புறத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. அந்தப் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் வந்துள்ளார். இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கையை சரமாரியாக அறுத்துக் கொண்டார். அங்கு இருந்த நபர்கள் கையை அறுத்துக் கொள்ள வேண்டாம் என கூறினர். ஆனால் அந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததன் காரணமாக மீண்டும் தனது கையை பலமுறை அறுத்துக் கொண்ட வீடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.