புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான நிவாரணத் தொகை நவம்பர் மாதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இலவச பெண்கள் பயணிகள் ஓய்வு விடுதிகள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள் அருகே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ள திருநங்கைகளின் பிரச்சினைகளை போக்கும் வகையில் திருநங்கைகள் நல வாரியம் அமைக்க அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் விவசாயிகள் அவர்கள் விளைவித்த நெல்லை FCI-ல் அனுப்பப்படும் போது நெல்லிற்கு கிலோவிற்கு ரூ.2 வீதம் ஊக்கத்தொகை கொடுக்கப்படும்.
இந்தியாவிலேயே முதல்முறையாக புதுச்சேரியில் சூரிய சக்தி பம்பு செட் அறிமுகப்படுத்தப்படுத்த உள்ளதாகவும், இதில் முதல் கட்டமாக 100 நபர்களுக்கு பரிசாத்ய முறையில் அறிமுகபடுத்தப்பட உள்ளது என அறிவித்தார்.