புதுச்சேரியில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… எந்தெந்த பகுதிகள் தெரியுமா..?

புதுச்சேரி வெங்கடா நகர் துணைமின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9:00 மணி‌ முதல் 11:00 மணி வரை ரெயின்போ நகர் 7 வது குறுக்கு தெரு முதல் 10 வது குறுக்கு தெரு வரை, கிருஷ்ணா நகர் முழுதும், சேத்திலால் நகர், மடுவுப்பேட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

இதேபோல் ஏரிப்பாக்கம் துணை மின் நிலைய மடுகரை மின்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கரியமாணிக்கம் மற்றும் மடுகரை பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.